Friday, December 7, 2007

பாதைகள் ...


எதிரில் ஆயிரம்
பாதைகள் பிரிந்தாலும்,
அனைத்து பாதையும்
பரிபூரணத்தை நோக்கியே,
என்று பயணம்கொள்
தோழா ...

பாதையை அறிவதும்
பாதையில் செல்வதும்
வெவ்வேறு என்று
உணர்வாய் தோழா ...

கடந்த பாதையை
திரும்பி பார்ப்பதில்
லாபம் இல்லை,
முன்மதியோடு முன்செல்வாய்
தோழா ...
புதிய பாதைகள்
உன் பயணத்துக்காக
காத்திருக்க
பயனில்லா கவலைகள்
உடைதெரிவாய்
தோழா ....

பழம் பாதைகள்
பாதுகாப்பாய் இருக்கலாம்,
ஆனால் புதியவர்களுக்கு இல்லை
என்றே புதுபாதை
அமைப்பாய் தோழா ....

புது தெம்பு உனக்கு
உண்டு என்று
வீறுக் கொள்வாய்
தோழா ...

பழம் உலகம் உடைப்பாய்
புது உலகம் படைப்பாய்
வா தோழா ...

luv,G J (c)
dedicated to the the new Sangam after kadai sangam,Idai Sangam which growed tamil ...
www.poetgawas.blogspot.com

No comments: